நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு, ஏரிகளில் மண் எடுக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
திருச்சி-சிதம்பரம், திண்டிவனம்- கும்பகோணம் ஆகிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க வேண்டும்.என விவசாயிகள் வலியுறுத்தினர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியது:-
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், டெல்டா பகுதியில் உள்ள சுக்கிரன் ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளது. சுமார் பல ஆயிரம் ஏக்கர் நடவு செய்த நெல் பயிர்கள் கருகும் சூழல் உள்ளதால் புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். டெல்டா பகுதியில் நெல் அறுவடை நடைபெறுகிறது. எனவே அரசானது கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
தூத்தூர் குருவாடி கோமான் பெரியநாகலூர் போன்ற டெல்டா பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாய நிலத்திற்கு டிராக்டர் மற்றும் வண்டிகளில் இடு பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் விவசாய நிலத்தில் அறுவடை செய்யும் பொருட்களை கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும். முத்துவாஞ்சேரி, குணமங்கலம் போன்ற பகுதிகளில் குறைந்த மின் அழுத்தத்தால் விவசாய மின் மோட்டார்கள் இயக்க முடியவில்லை. இதனால் விவசாயம் செய்ய இயலாத சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைகின்றனர். உடனே விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தை திறந்து சீராக மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கிராமங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி நீர் ஆதாரத்தை பேணி காக்க வேண்டும் என்றார்.
தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் பேசுகையில், சுக்கரன் ஏரியில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், தேளூர், நானங்கூர், ஓரியூர், கோமன் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். திருமானூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், குருவாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு அறுவடை திருவிழா நடத்த வேண்டும். தாட்கோ மூலம் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு வழங்கும் துரித மின் இணைப்பு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்றார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் கூறுகையில், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் போன்ற ஒன்றியங்களில் உளுந்துக்கான நிலுவை காப்பீடு தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பெரியாக்குறிச்சி பகுதியை உளுந்துக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டவேண்டும். திருச்சி- சிதம்பரம், திண்டிவனம்-கும்பகோணம் ஆகிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு, பொன்னேரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
கடலில் கலந்து வீணாகும் காவிரி நீரை பொன்னாற்றின் வழியாக அன்னகாரன்பேட்டை, சோழமாதேவி, கொக்கரனை, ஆயுதக்களம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். பொன்னேரி தடுப்பணை சட்டரை பழுது பார்க்க வேண்டும். கண்டிராதித்தம், சுக்கிரன், ராயம்புரம், சித்தம்மல்லி, பூவானிப்பட்டு ஆகிய ஏரிகளை ஆழப் படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு முந்திரி கன்றுகளை வழங்க வேண்டும் என்றார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து கூறுகையில், படைப்புழு தாக்கிய மக்காச்சோளப்பயிருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். கடன் வழங்குவதற்காக கூட்டுறவுத் துறைக்கு ரூ.1 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிரிக்கடன், சிறுதொழில் கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டு வரை அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத்தொகையை கோத்தாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் உலகநாதன் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் 28 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நூறுநாள் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கூலித் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் விஸ்வநாதன் கூறுகையில், உளுந்துக்கான பயிர்காப்பீடு தொகையினை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாததால், இதை நம்பி பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது, வறட்சியில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் விஜயலட்சுமி பதில் அளித்தார். மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், வேளாண் துணை இயக்குனர் சேட் முகமது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story