இந்திய வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து பிரான்ஸ் நாட்டு மாணவர்களுக்கு காரைக்காலில் பயிற்சி
இந்திய நாட்டின் வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு காரைக்கால் வேளாண் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால்,
இந்த மாணவர்கள், காரைக்காலை அடுத்த செருமாவிளங்கை கிராமத்தில் உள்ள உள்ள பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) சென்றனர். அங்கு அவர்களை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர், பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வருகை குறித்து, கல்லூரி முதல்வர் கந்தசாமி கூறும்போது, “ஆண்டுதோறும் வருகை தரும் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி பயிற்சிபெற்று செல்கின்றனர். இந்த பயிற்சியுடன் இந்திய கலாசாரம் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், பிரான்ஸ் நாட்டு வேளாண் தொழில் நுட்பங்களை இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இந்த பயிற்சி முறை இரு நாட்டு மாணவர் களுக்கும் நல்ல பலனை தருகிறது” என்றார்.
பின்னர் அவர்கள் கல்லூரி அருகில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்து பயிற்சியை தொடங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெறுவதற்காக நேற்றுக்காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். இங்கு பயிற்சியை முடித்துக் கொண்டு தொடர் பயிற்சியாக 8 நாட்கள் தமிழகப் பகுதியிலும் அதன் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொழில் நிறுவனங்களிலும் 15 நாட்கள் பயிற்சியும் பெறுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லைசி அக்ரிகோல் என்ற வேளாண் கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் மாணவர்கள் காரைக்கால் வந்து, இந்திய நாட்டின் வேளாண்மை முறைகள் குறித்து ஒரு மாத காலம் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு அந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நாத்தல்லே தலைமையில், 3 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 21 பேர் என மொத்தம் 24 பேர் கொண்ட குழுவினர் காரைக்கால் வந்தனர்.
இந்த மாணவர்கள், காரைக்காலை அடுத்த செருமாவிளங்கை கிராமத்தில் உள்ள உள்ள பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) சென்றனர். அங்கு அவர்களை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கந்தசாமி மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர், பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வருகை குறித்து, கல்லூரி முதல்வர் கந்தசாமி கூறும்போது, “ஆண்டுதோறும் வருகை தரும் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி பயிற்சிபெற்று செல்கின்றனர். இந்த பயிற்சியுடன் இந்திய கலாசாரம் குறித்தும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், பிரான்ஸ் நாட்டு வேளாண் தொழில் நுட்பங்களை இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இந்த பயிற்சி முறை இரு நாட்டு மாணவர் களுக்கும் நல்ல பலனை தருகிறது” என்றார்.
பின்னர் அவர்கள் கல்லூரி அருகில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களை அறுவடை செய்து பயிற்சியை தொடங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெறுவதற்காக நேற்றுக்காலை புதுச்சேரி புறப்பட்டு சென்றனர். இங்கு பயிற்சியை முடித்துக் கொண்டு தொடர் பயிற்சியாக 8 நாட்கள் தமிழகப் பகுதியிலும் அதன் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொழில் நிறுவனங்களிலும் 15 நாட்கள் பயிற்சியும் பெறுகின்றனர்.
Related Tags :
Next Story