இறுதி பட்டியல் வெளியீடு: 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் 32,404 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு


இறுதி பட்டியல் வெளியீடு: 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் 32,404 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 4:51 AM IST (Updated: 1 Feb 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். 32,404 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்,

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவஞானம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இப்பட்டியலில் 1.9.2018 முதல் 31.10.2018 வரையிலான சுருக்க திருத்த காலத்தில் சேர்க்கப்பட்ட தகுதி உள்ள புதிய வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட 34,457 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 33,088 மனுக்கள் வந்த நிலையில் தகுதி உள்ள வாக்காளர்களாக 32,404 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெயர் நீக்கத்துக்காக 22,223 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பரிசீலனைக்கு பின்னர் 21,229 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு 5,225 பேர் மனு செய்த நிலையில் 5,083 வாக்காளர்களுக்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 65,698 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 65,541. பெண்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 998. இதரர் 159 பேர் ஆவர். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27,156. இதில் ஆண்கள் 1 லட்சத்து 10,941, பெண்கள் 1 லட்சத்து 16,190. இதரர் 25.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34,476. இதில் ஆண்கள் 1 லட்சத்து 14,736 பெண்கள் 1 லட்சத்து 19,709. இதரர் 31.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32,537. இதில் ஆண்கள் 1 லட்சத்து 13,506 பெண்கள் 1 லட்சத்து 19,010 இதரர் 21.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40,676. இதில் ஆண்கள் 1 லட்சத்து 17,253, பெண்கள் 1 லட்சத்து 23,401. இதரர் 22.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8,733. இதில் ஆண்கள் 1 லட்சத்து 2,418 பெண்கள் 1 லட்சத்து 6,281. இதரர் 34.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11,338. இதில் ஆண்கள் 1 லட்சத்து 2916, பெண்கள் 1 லட்சத்து 8,407. இதரர் 15.

திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10,782. இதில் ஆண்கள் 1 லட்சத்து 3,771, பெண்கள் 1 லட்சத்து 7 ஆயிரம். இதரர் 11.

7 சட்டமன்ற தொகுதிகளிலும் சிவகாசி தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் தொகுதியில் குறைவான வாக்காளர்கள் உள்ளனர். திருச்சுழி தொகுதியில் கிராமங்கள் மட்டுமே அடங்கி உள்ளன.

இனியும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Next Story