அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.14½ கோடியில் நவீன சிகிச்சை பிரிவுகள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி திறந்து வைத்தனர்
அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.14½ கோடியில் கட்டப்பட்ட நவீன சிகிச்சை பிரிவுகளை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு ரூ.14½ கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம், இதய உள்ளுருவி கணிப்பு ஆய்வகம், சிறுநீரக சுத்திகரிப்புப்பிரிவு விரிவாக்கம், ரத்த புரத நோய்கள் ஆய்வகம், காந்தி அதிர்வு பிம்பங்கள் ஆகிய நவீன சிகிச்சை பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜவேலு வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு நவீன சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து பேசினர்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், ஆவின் தலைவர் வேலழகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், வேலூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமு, கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், பென்னாத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் அருள்நாதன், பகுதிக்கழக செயலாளர்கள் பாண்டியன், ரமேஷ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story