அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Feb 2019 4:45 AM IST (Updated: 2 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,413 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

குளித்தலை,

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,413 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விநாயகம், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமால், மாவட்ட கல்வி அதிகாரி தங்கவேல், குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் கபீர், அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து குளித்தலை நகராட்சி நிர்வாகம் சார்பில், சிறப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தலா ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களை குளித்தலை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

Next Story