அமெரிக்காவை கண்டித்து சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவை கண்டித்து சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2019 3:45 AM IST (Updated: 2 Feb 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

சுதேசி மில் அருகில் சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை சதி செய்து கவிழ்க்கும் அமெரிக்காவை கண்டித்து சோசலிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தமிழ்நாடு தலைவர் அனவர்தன், புதுச்சேரி செயலாளர் முத்து, தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, அமெரிக்க அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story