மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் உதவி கலெக்டர் தேன்மொழி வெளியிட்டார்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் தேன்மொழி வெளியிட்டார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் தேன்மொழி வெளியிட்டார். அதனை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பெற்று கொண்டார். மயிலாடுதுறை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மயிலாடுதுறையில், ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 721 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 925 பேரும், மூன்றாம் பாலினம் 13 பேரும் ஆகமொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 659 பேர் உள்ளனர்.
சீர்காழியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 169 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 496 பேரும், மூன்றாம் பாலினம் 7 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 672 பேர் உள்ளனர்.
பூம்புகாரில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28 ஆயிரத்து 213 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 481 பேரும், மூன்றாம் பாலினம் 3 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 697 பேர் உள்ளனர்.
திருவிடைமருதூரில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 701 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 79 பேரும், மூன்றாம் பாலினம் 14 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 794 பேர் உள்ளனர்.
கும்பகோணத்தில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 377 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 554 பேரும், மூன்றாம் பாலினம் 3 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 934 பேர் உள்ளனர்.
பாபநாசத்தில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 539 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 505 பேரும், மூன்றாம் பாலினம் 10 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 54 பேர் உள்ளனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 27 ஆயிரத்து 720 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 40 பேரும், மூன்றாம் பாலினம் 50 பேரும் ஆக மொத்தம் 14 லட்சத்து 66 ஆயிரத்து 810 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 320 பேர் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வாக்காளர் பட்டியல் நகல்களை எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், பா.ஜனதா கட்சியின் நகர செயலாளர் மோடிகண்ணன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராமானுஜம் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பெற்று கொண்டனர். அப்போது தாசில்தார்கள் விஜயராகவன், சபீதா தேவி, தேர்தல் துணை தாசில்தார் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
உதவி கலெக்டர் தேன்மொழி கூறுகையில், இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சரிபார்த்து கொள்ளலாம். பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆட்சேபனை செய்தால் சேர்த்து கொள்ளப்படுவார்கள். விடுபட்ட தகுதி உடைய வாக்காளர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் சேர்க்க முகாம் எதுவும் செயல்படாது. நேரடியாக தாலுகா அலுவலகத்தை அணுக கேட்டு கொள்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story