காஞ்சீபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்
காஞ்சீபுரத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் புதிய பெட்ரோல் நிலைய திறப்பு விழா காஞ்சீபுரம் வையாவூர் சாலையில் நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். பெட்ரோல் விற்பனை நிலையத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பேசினார்.
தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் பழனிசாமி, காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண்மை இயக்குனரும், கூட்டுறவு துறை இணைப்பதிவாளருமான எஸ்.பாபு, பொது மேலாளர் வெங்கடாசலபதி, காஞ்சீபுரம் கூட்டுறவு துணைப்பதிவாளர் எஸ்.உமாபதி, காஞ்சீபுரம் கூட்டுறவு சார் பதிவாளர் வி.அருண்குமார், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலிதிருநாவுக்கரசு, காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story