நாமக்கல்லில் கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 127 பேர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து


நாமக்கல்லில் கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 127 பேர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து
x
தினத்தந்தி 3 Feb 2019 3:00 AM IST (Updated: 3 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 127 பேரும் நேற்று போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்.

நாமக்கல், 

நாமக்கல்லில் சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 127 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களுக்கு நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு தனபால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து கடந்த 30-ந் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 127 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்துக்கு 2 நாட்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் போலீஸ் நிலையம் வந்த 127 பேரும் அங்கு கையெழுத்து போட்டனர்.

பின்னர் அவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இவர்கள் 127 பேரும் போராட்டத்தில் கைதானபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, இதுவரை மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story