ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி கரூரில் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி கரூரில் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.
கரூர்,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவையொட்டி, கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மண்மங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு இடையேயான கிரிக்கெட் மற்றும் கபடி ஆகிய விளையாட்டு போட்டிகளை நேற்று காலை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராஜ், முன்னாள் மாணவரணி செயலாளர் தானேஷ், இளைஞரணி பொறுப்பாளர்கள் சத்யா நவநீதன், மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து கரூர் நகரத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டிங் செய்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதேபோல் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, செல்லாண்டியம்மன் கோவில், சின்னதாராபுரம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் திடல், புலியூர் கவுண்டம்பாளையம் உயர்நிலைப்பள்ளி, வெள்ளியணை, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, அய்யர்மலை, காவல்காரன்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கபடி, கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நகர அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கபடி, கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் கரூர் மாவட்ட அளவிலான கபடி, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் 10-ந்தேதி காலை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான சதுரங்க போட்டி கரூர் அருகேயுள்ள அட்லஸ் கலையரங்கில் நடக்கிறது. அன்றைய தினம் மதியம் திருவள்ளுவர் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து அன்று மாலை 5 மணியளவில் அட்லஸ் கலையரங்கில் நடக்கும் விழாவில் ஒன்றிய, நகர, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி பாராட்டி பேசுகிறார்.

Related Tags :
Next Story