மாவட்ட செய்திகள்

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + On the occasion of the anniversary of Anna's statue, the DMK,

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்,

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அரியலூர் காமராஜர் திடலில் இருந்து மாவட்ட அ.தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தலைமையில், மவுன ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் தேரடியில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலத்தினர். இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் துரைராஜ், இளைஞரணி மாவட்ட தலைவர் இளையராசன், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ம.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், காமராஜ், நகர செயலாளர் மனோகரன் மற்றும் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி ஜெயங்கொண்டம் அ.தி.மு.க சார்பில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில், அக்கட்சியினர் காந்தி பூங்காவில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் தி.மு.க.வினர் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செந்துறையில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராசு ஆகியோர் தலைமையில் கட்சியினர் செந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, இளைஞரணி செயலாளர் பாண்டியன் மற்றும் முன்னாள் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
இந்தியாவில் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊட்டியில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
2. 4-ம் ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
3. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4. பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5. திருவாரூர் அருகே, காட்டூரில் உள்ள கருணாநிதி தாயார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார்.