அண்ணா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


அண்ணா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2019 5:00 AM IST (Updated: 4 Feb 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 50–வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எல்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர்செல்வி, நகர செயலாளர் அன்பானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வடக்கு மாநில தி.மு.க.வினர் செஞ்சி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்திற்கு வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர்கள் குமார், பெல்லாரி கலிய பெருமாள், பொருளாளர் செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர் ஜெ.வி.எஸ்.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் புஸ்சி வீதி வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாநில தி.மு.க.வினர் சுதேசி மில் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். ஊர்வலத்திற்கு தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் அவைத்தலைவர் சீத்தா.வேதநாயகம், பொருளாளர் சன்.குமாரவேல், முன்னாள் அமைச்சர் மணிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதுவை மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அருள், மாநில அவைத்தலைவர் சுத்துக்கேணி பாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் வி.கே.மூர்த்தி, துணைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜர், பொன்.நடராஜன், தேவநாதன், மோகன், கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காக்காயந்தோப்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுவை மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி அவைத்தலைவர் நடராஜன், குமரன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க. மாநில தலைவர் கபிரியேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பாவாடைசாமி, செல்வராசு, கலைவாணன், இளங்கோ, வேதா உள்பட பலர் கலந்துகொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.க. மண்டல தலைவர் ராசு, செயலாளர் அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story