குத்தாலம் அருகே கிருபாகுபேஸ்வரர் கோவிலில் கலசம் மாயம் போலீசார் விசாரணை


குத்தாலம் அருகே கிருபாகுபேஸ்வரர் கோவிலில் கலசம் மாயம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Feb 2019 4:00 AM IST (Updated: 5 Feb 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கிருபாகுபேஸ்வரர் கோவிலில் கலசம் மாயமானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கிருபாகுபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கோவில் வளாகத்தில் 5 சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளின் கோபுரங்களில் 9 கலசங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர்களில் சிலர் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதி கோபுரத்தில் இருந்த 3 கலசங்களில் ஒரு கலசம் மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த கலசம் 1½ அடி உயரமும், ½ கிலோ எடையும் கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன் பாலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கலசம் எப்போது மாயமானது என்றும்

இந்தகோவிலை பராமரித்து வரும் அறக்கட்டயை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story