தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Feb 2019 11:30 PM GMT (Updated: 4 Feb 2019 7:52 PM GMT)

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் வருகிற 10-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு விழாவின் தொடக்கமாக நேற்று காலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஆயுதப்படை மைதானம் அருகே தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா முன்னிலை வகித்தார்.

பேரணியானது குரூஸ்பர்னாந்து சிலை மற்றும் பாலவிநாயகர் கோவில் வழியாக தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு வந்தடைந்தது. முன்னதாக பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் சாலை விதிகளை சரியாக கடைபிடித்து வாகனம் ஓட்டியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் (பொறுப்பு), தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மன்னர் மன்னன், சக்திவேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேஷ், பாத்திமா பர்வின், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சிசில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story