தேனி அருகே செல்போன் திருடியவர் கைது


தேனி அருகே செல்போன் திருடியவர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 3:15 AM IST (Updated: 5 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி,

தேனி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு செல்போன் விற்பனை கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியாற்றும் கடைக்கு ஒருவர் செல்போன் வாங்குவது போல் வந்தார். திடீரென ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடினார். இதனை கண்ட ஊழியர்கள், விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் சென்னை வேளச்சேரி கார்த்திகேயபுரத்தை சேர்ந்த ரவி (37) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தார்.

Next Story