மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 612 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை விடுதி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுக்க திரண்டு வந்தனர். அதில், தங்கள் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், விதிமுறைகள்எதுவும் பின்பற்றப்படவில்லை. மேலும் ஊராட்சி செயலாளர் முறையான வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இது குறித்து நாங்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, எங்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், சிலரை வைத்து மிரட்டுகிறார். எனவே எங்கள் ஊராட்சியில் மறு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சியில் வரவு-செலவு கணக்குகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு, கலைந்து சென்றனர்.
இதேபோல வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் ஊராட்சியிலும் விதிமுறைகளை மீறி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. எனவே முறையான சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஆவுடையார்கோவில் தாலுகா பனையவயல் பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே நாங்கள் வசித்து வரும் இடங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், எங்கள் பகுதிக்கு பாதையை சரிசெய்தும், கழிவறை மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
காரையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் முத்துச்சாமி என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கிய நிவாரணம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரண தொகையை வழங்கி கையாடல் செய்து விட்டனர். இது குறித்து தாசில்தாரிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக ஒருவரை நாங்கள் பணியிடை நீக்கம் செய்து உள்ளதாக கூறினார். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
புதுக்கோட்டை விடுதி ஊராட்சி கும்மங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் 35 நாட்களுக்கு மேல் வேலை வழங்கப்படுவதில்லை. மேலும் வேலை பார்த்தவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவது இல்லை. இது குறித்து நாங்கள் கேட்டால், நீங்கள் வேலைக்கு வரவேண்டாம் எனக்கூறுகின்றனர். மேலும் இது குறித்து கேட்டவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதும் இல்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
பழங்குடி குறவன் கூட்டமைப்பின் சார்பில் கொடுத்த மனுவில், அரசு ஆவணங்களில் நரிக்குறவன் பெயருக்கு மாற்றாக வாக்கிரி என மாற்ற வேண்டும். எங்கள் இனப்பெயரை திரைப்படங்களில் தவறாக சித்தரிப்பதை தடுக்க வேண்டும். 2012-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள குறவர்களான எங்களை மலைக்குறவன் என பழங்குடி பட்டியலில் இணைக்க அளித்த அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். குறிஞ்சி நில குறவர்களின் வரலாற்றை இழிவுபடுத்த எடுக்கும் குறவன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story