எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று கூறுவதா? முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் - அசோக் சவான் வலியுறுத்தல்


எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று கூறுவதா? முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் -  அசோக் சவான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:26 PM GMT (Updated: 4 Feb 2019 10:26 PM GMT)

மும்பையில் நடந்த பா.ஜனதா இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அசோக் சவான் எதிர்க்கட்சியினரை நாயுடன் ஒப்பிட்டு பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயம் காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனநிலை சமநிலையை இழந்துவிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று பொது இடத்தில் கூறியது முதல்-மந்திரியின் கீழ்தரமான அரசியல் ஆகும்.

மராட்டிய மக்கள் இதுபோன்ற பேச்சுகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் பா.ஜனதாவை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story