பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது - கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை(புதன்கிழமை) கூடுகிறது. சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு உள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், குமாரசாமி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு தொடர்ந்து பேசினால், பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் சித்தராமையா மீது தேவேகவுடா குறை கூறினார். இதே நிலை தொடர்ந்தால் அதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று எச்சரித்தார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவை அழைத்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேவேகவுடா மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோருக்கு எதிராக கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவதை கட்டுக்குள் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து பிரச்சினை சுமுக நிலைக்கு வந்தது.
இதற்கிடையே கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, பா.ஜனதா ஆட்சியை கொண்டுவர பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வது சந்தேகம் தான் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதில் அளித்துள்ள குமாரசாமி, ‘‘திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்வேன், நல்ல திட்டங்களை அறிவிக்க உள்ளேன், யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குகிறது. இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா நாளை உரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து வருகிற 8-ந் தேதி நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பா.ஜனதா சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் மசோதாவுக்கு அனுமதி பெறும் முன்பே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுவதால், பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் மூலம் தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி அரசு அமைந்த பிறகு குமாரசாமி 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கர்நாடக சட்டசபை கூடுவதையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story