உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை,
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அந்தோணியார் ஆலயம்
தென்மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ ஆலயங்களில் பிரசித்திபெற்றது நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மறையுரை
தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர் கோட்டார் பிரான்சிஸ் சேவியர் பேராலயகுணபால் ஆராச்சி மறையுரை நடத்தினார். இதில் இன்பதுரை எம்.எல்.ஏ., ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலி
திருவிழா வருகிற 17–ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.15 மணிக்கு நலநாள் திருப்பலியும், இரவு 7 மணிக்கு மறையுரையும் நடக்கிறது. 11–ம் திருவிழாவான வருகிற 15–ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. வருகிற 16–ந் தேதி (சனிக்கிழமை) பெருவிழா மாலை ஆராதனையும், வருகிற 17–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலியையும், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைக்கிறார்.
திவ்யநற்கருணை ஆசீர்
காலை 9 மணிக்கு மலையாளத்தில் பெருவிழா திருப்பலியை கேரள மாநிலம் அஞ்சன்கோ மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்பாஸ்கரன் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து சப்பரபவனியும், திருப்பலியும் நடக்கிறது. மாலையில் திவ்யநற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் தோமினிக்அருள்வளன், ஷிபாகர், திருதொண்டர் வில்லியம், திருத்தல நிதிகுழு, பணிக்குழு மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story