மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏற்றி இந்திய ஜனநாயக கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏற்றி இந்திய ஜனநாயக கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2019 3:30 AM IST (Updated: 6 Feb 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

மின்விளக்குகள் எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏற்றி இந்திய ஜனநாயக கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தேவனேரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக அரசு சார்பில் சோடியம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக அந்த மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனால் இ.சிஆர். சாலையில் சாலை விபத்துகள், வழிப்பறி சம்பவங்கள் ஏற்படுவதாக கூறி இந்திய ஜனநாயக கழகத்தினர் அதன் நிறுவன தலைவர் மல்லை பாரூக் தலைமையில் நேற்று மாமல்லபுரம் இ.சி.ஆர். புறவழிச்சாலையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி இ.சி.ஆர். சாலையில் இருள் சூழ்ந்த பகுதியில் நடைபயணமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். தீப்பந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story