போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 6 Feb 2019 3:30 AM IST (Updated: 6 Feb 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மனிதநேய வாரவிழா நடத்தப்பட்டது.

திருவள்ளூர்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளும், அரசு கலைக்கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகள், மதநல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், விஜயகுமார், வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, ஆதிராவிடர் நலத்துறை இயக்குனர் முரளிதரன், தாட்கோ மேலாண்மை இயக்குனர் சஜ்ஜன்சிங் ரா சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ரிட்டோ சிரியாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஓட்டெம் டாய் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளையும், சான்றிதழ்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளருமான கமாண்டோ பாஸ்கரன், பூந்தமல்லி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story