லஞ்ச அதிகாரிகளை கண்டித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு மாற்றுத்திறனாளி (பார்வையற்றவர்) மனு கொடுக்க வந்தார். பின்னர் திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, அவரை தடுத்து மீட்டனர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணையில் போலீசாரிடம், அவர் கூறியதாவது:-
எனது பெயர் நாகராஜ் (வயது 36) ஆகும். நிலக்கோட்டை தாலுகா குல்லலக் குண்டு எனது சொந்த ஊர். எனது தந்தை குருசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய பெயரில் வீட்டுமனை உள்ளது. அதை எனது பெயருக்கு மாற்ற முயன்றேன். ஆனால், எனது தந்தையின் இறப்பு சான்றிதழில் தாத்தாவின் பெயரை பூலாங்காத்தான் என்பதற்கு பதிலாக சடையன் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் வீட்டுமனையை எனது பெயருக்கு மாற்ற முடியவில்லை. எனவே, இறப்பு சான்றிதழில் எனது தாத்தாவின் பெயரை திருத்தம் செய்து தரும்படி விண்ணப்பித்தேன். ஆனால், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதோடு, கடந்த 6 மாதங் களாக என்னை அலைய வைக் கின்றனர். இதனால் விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபற்றி அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் வேலு நேரில் வந்து, நாகராஜிடம் விசாரணை நடத்தினார். அப்போது நாகராஜ் கதறி அழுதபடி தனது குறைகளை தெரிவித்தார். இதையடுத்து 15 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழில் திருத்தம் செய்து கொடுக் கும்படி சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் நாகராஜின் ஆடைகள் நனைந்து இருந்ததால், அவருக்கு வேட்டி வழங்கவும் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story