டிஸ்கவரி ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்
லேண்ட் ரோவர் நிறுவனம் டிஸ்கவரி மாடலில் புதிய சிறப்பு எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காரின் விலை ரூ.53.77 லட்சமாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் உள்பகுதி மற்றும் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கருப்பு, வெள்ளை, கோரிஸ் கிரே ஆகிய நிறங்களில் மட்டும் இது கிடைக்கிறது.
இது 180 ஹெச்.பி. திறன் கொண்ட 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இதன் மேற்கூரை வித்தியாசமான வண்ணத்தில் உள்ளது. முன்புற பம்பர் மற்றும் அலாய் சக்கரங்கள் வாகனத்தின் தோற்றப் பொலிவை மேலும் அழகூட்டுகிறது. இதன் உள்பகுதியில் இருக்கை ‘எபோனி’ என்ற பிரத்யேக தோலினால் ஆனது.
இது மிகவும் மிருதுவாக இருப்பதால் சவுகரியமான பயணம் உறுதியாகிறது. இதில் 7 பேர் பயணிக்க முடியும். டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் எஸ்.எஸ்.இ. என இரு மாடல்களை ஸ்பெஷல் எடிஷனாக இந்நிறுவனம் தயாரிக்கிறது. இது பி.எம்.டபுள்யூ.எக்ஸ்3, ஆடி க்யூ5, வோல்வோ எக்ஸ்.சி 60, மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.சி. ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.
மேம்பட்ட மாடலை அறிமுகம் செய்து டாடா குழுமத்தின் அங்கமான லேண்ட் ரோவர் நிறுவனம் தனது புத்தாண்டு கணக்கைத் தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story