விரைவில் வருகிறது யமஹா எம்.டி. 15
மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் யமஹா நிறுவனம் எம்.டி.15 என்ற பெயரில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றது என்பதற்கான மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சி.எம்.வி.ஆர். அனுமதி சான்று பெறப்பட்டுள்ளது.
அந்த அனுமதி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த மோட்டார் சைக்கிள் 155 சி.சி. திறன் கொண்டதாயிருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டதாகவும், 19.3 ஹெச்.பி. திறனை 10 ஆயிரம் ஆர்.பி.எம்.மிலும், 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுதிறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
இந்திய சாலைகளுக்கென வடிவமைக்கப்பட்ட இந்தமோட்டார் சைக்கிள் 2,020 மி.மீ. நீளமும், 800 மி.மீ. அகலமும், 1,070 மி.மீ. உயரமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய இதே மாடல் மோட்டார் சைக்கிளைக் காட்டிலும் இந்தியாவில் அறிமுகமாகும் மாடலின் நீளம் அதிகமாகும். இருந்தாலும் மாடல்களிலும் ஒரே அளவிலான சக்கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த மோட்டார் சைக்கிளின் எடை 138 கிலோ இருக்கும் என்று தெரிகிறது.
சர்வதேச அளவில் உபயோகத்தில் உள்ள இந்த மாடல் மோட்டார் சைக்கிளைக் காட்டிலும் இந்திய மாடல்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் வழக்கமான டெலஸ்கோப்பிக் போர்க் உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகமாக உள்ளது.
Related Tags :
Next Story