அனைவரையும் சுண்டி இழுக்கும் ‘ஹானர் வியூ 20’
முதன் முதலில் ஒரு ஸ்மார்ட்போனைப் பார்த்தீர்கள் என்றால் அதன் தோற்றம் உங்களை வசீகரிக்கும். நாளடைவில் நீங்கள் அதை நேசிக்கத் தொடங்குவீர்கள். அந்த வகையில் சிறப்பான வடிவமைப்பு, பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் தோற்றம், மிகச் சிறந்த செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்போனை ஹூவாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புத்தாண்டில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘ஹானர் வியூ20’ மாடல் ஸ்மார்ட்போன் விலை ரூ.37,999. இது நிச்சயம் இதே விலைப் பிரிவில் உள்ள ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுக்கு நிச்சயம் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
6.4 அங்குல தொடு திரை மிக விரைவாக செயல்படுகிறது. அதேபோல பின்புறம் ஒளி ஊடுருவும் வகையிலான வடிவமைப்பு ‘வி’ போன்ற தோற்றத்தில் ஔிரும் அம்சங்களுடன் வந்துள்ளது.
நீண்ட நேரம் பேசுவதற்கு வசதியாக 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் 40 சதவீத பேட்டரி மீதமிருக்கும். இதில் சூப்பர் சார்ஜர் அளிக்கப்பட்டுள்ளது. 22.5 வாட் கொண்ட இந்த சார்ஜர் மூலம் 30 நிமிடத்தில் 60 சதவீதம் சார்ஜ் செய்ய முடிகிறது. இதில் 48 மெகா பிக்செல் சோனி கேமரா சென்சார் உள்ளது. இதுதான் இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதில் உள்ள இரண்டாவது கேமரா டைம் ஆப் லைட் எனப்படும் உணர் தன்மை கொண்டது. இது அகச்சிவப்பு கதிர்களை வெளிப்படுத்தும். இதனால் புகைப்படம் எடுக்கும் பகுதி முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்தும். இதில் ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் யு.ஐ. 2.0 இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள கேமரா நிச்சயம் இதற்கென வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்தும்.
Related Tags :
Next Story