விளையாட்டு வீரர்களுக்கான ‘ஸ்மார்ட் ஷூ’
காலணிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நைக்கி (Nike ) விளையாட்டு வீரர்களுக்கான ஸ்மார்ட் ஷூவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘நைக் அடாப்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஷூவில் லேஸ் கிடையாது. உங்கள் காலுக்கேற்ற வகையில் இது அட்ஜெஸ்ட் செய்யும். இதை உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே நிறைவேற்ற முடியும். இதில் உணர் கருவிகள் (சென்சார்), ஆக்சிலரோ மீட்டர், கைராஸ்கோப் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களும் உள்ளன. இதை இரு வாரங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். முதல் கட்டமாக கூடைப்பந்தாட்ட வீரர்களுக்காக இந்த ஷூக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.25 ஆயிரமாகும்.
2017-ம் ஆண்டிலிருந்தே ஸ்மார்ட் ஷூக்களை தயாரிக்கத் தொடங்கிய நைக்கி நிறுவனம், தற்போதுதான் வர்த்தக ரீதியில் இதை சந்தைப்படுத்தியுள்ளது. முன்னர் ஆர்டரின் பேரில் இது தயாரித்து அளிக்கப்பட்டது. அப்போது இதன் விலை 720 டாலராக இருந்தது. தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கத் தொடங்கியபிறகு விலை பாதியாக (350 டாலர்) குறைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story