பயணத்துக்கேற்ற ‘கோரி’ தலையணை
ரெயில் பயணங்களில் காற்றடைத்த தலையணையை பயன்படுத்துவது வழக்கம். பஸ் பயணத்தில் பெரும்பாலும் பக்கத்தில் அமர்ந்திருப்போர் மீது தூங்கி விழுபவர்களும் உண்டு. விமான பயணத்தில் சிறிது நேர தூக்கம் புத்துணர்வை அளிக்கும்.
அதற்கேற்ப மிகச் சிறந்த வடிவமைப்புடன் கூடிய ‘கோரி’ என்ற பயண தலையணையை உருவாக்கியுள்ளனர். இந்த தலையணையை எடுத்துச் செல்வதும் எளிது. கழுத்துக்கு இதமளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சவுகரியத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வதுதான் இதன் சிறப்பம்சம்.
பல வண்ணங்களில் இரண்டு சிறிய அளவிலான தலையணை தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வெல்குரோ உள்ளதால் தலையணையை உங்களுக்கு சவுகரியமான பகுதியில் வைத்துக் கொள்ள முடியும். கழுத்து வலியோ, சுளுக்கோ நிச்சயம் ஏற்படாது. இதன் எடை 230 கிராம். அழகாக சுருட்டி எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை 59 டாலர் ஆகும்.
Related Tags :
Next Story