எழுத்தையும், பேச்சையும் பதிவு செய்யும் ஸ்மார்ட் பேனா
கணித வகுப்புகளில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சில நேரம் அவருடைய வேகத்திற்கேற்ப மாணவர்களால் எழுத முடியாது. ஆசிரியர் சொல்வதும் சரியாக புரியாமல் போய்விடும். மாணவர்களின் இந்த சிக்கலைத் தீர்க்கவே எக்கோ ஸ்மார்ட் பேனாவை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கென்று பிரத்யேகமாக இருக்கும் சிறிய துளைகள் கொண்ட ‘லைவ் ஸ்க்ரிப்’ எனப்படும் பேப்பரில் இந்த பேனாவைக் கொண்டு எழுதலாம். சாதாரண பேனாக்களை போலின்றி எக்கோ ஸ்மார்ட் நாம் எழுதுவதை பதிவு செய்யும். அதே நேரத்தில் ஆசிரியரின் வாய்மொழியில் சொல்லப்படுவதையும் பதிவு செய்து விடும்.
நாம் சரியாக கவனிக்காமல் விட்டதை கூட மீண்டும் இவற்றில் கேட்டுக் கொள்ளலாம். பதிவு செய்த பக்கங்களை நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். 2 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்பேனா.
ஆயிரக்கணக்கான பக்கங்களை இது பதிவு செய்யும். 200 மணி நேர ஆடியோவையும் இதனுள் சேமிக்கலாம். நமது கணினியுடன் இணைத்துக் கொண்டு தேவைப்பட்டால் பிரதி எடுத்துக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் பேனாவின் விலை 164 அமெரிக்க டாலர் ஆகும்.
Related Tags :
Next Story