உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலைவீழ்ச்சி


உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலைவீழ்ச்சி
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 7:43 PM GMT)

உப்புக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

உப்புக்கோட்டை,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளும் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. வருடத்தின் அனைத்து பருவத்திலும் இங்கு காய்கறிகள் கிடைப்பது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகளுக்கு கர்நாடகா, கேரள மாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது.

தற்போது கம்பம் பள்ளத்தாக்கின் கடைமடை பகுதியில், 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி அறுவடை பணி நடந்து வருகிறது. தோட்டங்களில் பறிக்கப்பட்ட தக்காளிகள் தரம் பிரிக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைத்ததாலும், நோய் தாக்குதல் இல்லாததாலும் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. அதேநேரத்தில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு கவலை அடைந்துள்ளனர்.

Next Story