குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் அவசியம் ஏற்பட்டால் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம் - ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. பேட்டி
குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம் என்றும் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் கூட்டத்திற்கு வரவில்லை. கூட்டணி அரசில் எதுவும் சரியில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. முதல்-மந்திரி குமாரசாமி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் கவுரவமாக பதவியை விட்டு செல்ல வேண்டும்.
காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எங்கள் தொடர்பில் இல்லை. தங்களின் குறைகளை மூடிமறைக்க பா.ஜனதா மீது ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதாக காங்கிரசார் குற்றம்சாட்டு கிறார்கள். இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பகுதிகளில் இந்த அரசு எந்த நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அதனால் கவர்னரின் உரைக்கு எந்த மரியாதையும் கிடையாது. எதற்காக குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த கூட்டணி அரசுக்கு எதிராக நாங்கள் படிப்படியாக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். நாளையும் (இன்று) எங்கள் போராட்டம் நடைபெறும். அவசியம் ஏற்பட்டால் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம். இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.
Related Tags :
Next Story