தனித்து போட்டியிடும் கமல்ஹாசன் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் நல்ல வி‌ஷயம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


தனித்து போட்டியிடும் கமல்ஹாசன் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் நல்ல வி‌ஷயம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுசேரியை அடுத்த வாணியன்சாவடியில் உள்ள டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் மீன் விற்பனை கூடம் மற்றும் உணவகத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.

திருப்போரூர்,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி என்பதை கட்சி தலைமை அறிவிக்கும். மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க. தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்குவது 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவதையே காட்டுகிறது.

பா.ம.க. எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான். தி.மு.க. இனி கோட்டை பக்கம் வர வாய்ப்பே இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் விருப்ப மனு வாங்கி இருப்பதை வாரிசு அரசியலாக கருத முடியாது. மதுக்கடைகளை அரசே நடத்தினாலும், மக்கள் மது குடிப்பதை அரசு ஊக்குவிக்கவில்லை. மது குடிப்பவர்களே தாமாக அந்த பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசன் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் அதுவே நல்ல வி‌ஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story