திருட்டுப்போன செல்போன்- வாகனங்களை கண்டுபிடிக்க சென்னை போலீசில் புதிய செல்போன் செயலி அறிமுகம் நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில் கமிஷனர் தொடங்கி வைத்தார்
திருட்டுப்போன செல்போன், வாகனங்களை கண்டுபிடிக்க சென்னை போலீசில் புதிய செல்போன் செயலியை நடிகர் விஜய்சேதுபதி முன்னிலையில் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னையில் செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டை குறைப்பதற்காக போலீசார் ‘டிஜிகாப்’ எனப்படும் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் தொடக்கவிழா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘டிஜிகாப்’ செல்போன் செயலி திட்டத்தை முறைப்படி அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.
அதேவிழாவில், கண்காணிப்பு கேமரா தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தின் சி.டி.யையும் போலீஸ் கமிஷனர் வெளியிட்டார். அந்த சி.டி.யை நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.
அந்த குறும்படத்தில், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகை சினேகா, தொழில் அதிபர் ஐசரிகணேஷ், டாக்டர் கள் சாந்தா, கமலாசெல்வராஜ், பாடகர் கானாபாலா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களும் எழில்மிகு பூங்கா வசதியோடு தற்போது சுத்தமாக காட்சி அளிக்கிறது. சில போலீஸ் நிலையங்களில் செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பழைய வாகனங்களும், குப்பைகளும் சூழ்ந்து காணப்பட்ட போலீஸ் நிலையங்கள், தற்போது பொலிவான தோற்றத்துடன் சுத்தமாக காட்சியளிக்கிறது.
இது தொடர்பாகவும் சென்னை போலீசார் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அந்தப்படத்தின் சி.டி.யையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழாவில் வெளியிட்டார்.

Related Tags :
Next Story