‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 13-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 13-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சென்னை,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன்முறை படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று கடையை திறந்து வைத்து பொருட்கள் எதையும் விற்பனை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பெரும்பாலான இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசின் நெருக்கடி காரணமாக சில இடங்களில் கடைகள் செயல்பட்டதாகவும் அரசு பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சென்னையை பொறுத்தவரையில் பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் இயங்கின. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வழக்கம்போல் கடையை திறந்து ‘பில்லிங் மெஷினில்’ பொருட்கள் எதையும் பதிவு செய்யாமலும், விற்பனை செய்யாமலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
எங்களுடைய முக்கிய கோரிக்கையான ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஊதியக்குழு அறிக்கையை அரசாணையாக அரசு வெளியிட வேண்டும். தொடர்ந்து அரசு எந்த பதிலும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தால், வருகிற 13-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மனிதாபிமான அடிப்படையில் ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நல்ல முடிவினை அறிவிக்க உள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த பணியாளர்களை கொண்ட சில சங்கங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
இதை தடுக்கும் வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story