மானாமதுரை பகுதியில் வீணாகி வரும் குடிநீர்


மானாமதுரை பகுதியில் வீணாகி வரும் குடிநீர்
x
தினத்தந்தி 7 Feb 2019 3:30 AM IST (Updated: 7 Feb 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் குடிதண்ணீர் வீணாகி வரும் நிலை நீடித்து வருகிறது.

மானாமதுரை,

மானாமதுரை நகர் வைகையாறு கரையோரம் அமைந்திருப்பதால் மானாமதுரை மற்றும் அதன் அருகே உள்ள ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் மானாமதுரையை சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலபசலை, கட்டிக்குளம் உள்பட பல கிராமங்களில் குடிநீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சரிவர பராமரிப்பது கிடையாது. மேலும் மின்மோட்டாரை இயக்கிவிட்டு அதை குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்துவது இல்லை. இதனால் தண்ணீர் தொட்டி நிரம்பிய நிலையிலும் பல மணிநேரம் மோட்டார் இயங்கி கொண்டிருக்கும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருவதுடன், மின் கட்டண சுமையும் அதிகரிக்கிறது.

குடிநீர் தொட்டி முழுவதும் நிரம்பி அதில் இருந்து வழியும் தண்ணீர் அருகே தாழ்வான பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு பல நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதை அந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

சமீபத்தில் மானாமதுரை மேலநெட்டூர் ஒத்தவீடு அருகே மின்மோட்டாரை இயக்கி விட்டு நிறுத்தமால் விட்டுவிட்டனர். இதனால் குடிநீர் தொட்டி நிரம்பி 4 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகி உள்ளது. இந்த தண்ணீர் பல நாட்கள் தேங்கி கிடந்துள்ளதால் அதில் குப்பைகள் சேர்ந்தும், பாசி படித்தும் விட்டது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தண்ணீர் வீணாக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story