சம்பா அறுவடை நடப்பதால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
சம்பா அறுவடை நடப்பதால் மார்க்கெட் சொசைட்டி மூலம் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மதகடி காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- காரைக்கால் மாவட்டத்தில் சம்பா அறுவடைப்பணிகள் தொடங்கி உள்ளதால், மார்க்கெட் சொசைட்டி மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு காலத்தோடு கிடைப்பது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி காரைக் காலுக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி நீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால், திருநள்ளாறு, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தோட்டப்பயிர் அதிகளவில் சாகுபடிகள் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் விக்ராந்த்ராஜா, விவசாயிகள் தெரிவித்த குறைகள் மீது அந்தந்த துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள். காவிரி நீர் பெறுவது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story