பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்  அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:30 AM IST (Updated: 7 Feb 2019 7:30 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கினார்.

91 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர்களும், 102 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு வகையான தொழில்கள் செய்வதற்கு ரூ.4 கோடியே 74 லட்சத்து 77 ஆயிரம் வங்கி கடனும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், மாநில கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் கண்ணன், மாநில பேச்சாளர் கணபதி, அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பெருங்கோட்டூரில் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார். குருவிகுளம் யூனியன் அலுவலகத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் சாயமலையில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம், சிதம்பராபுரத்தில் புதிய கால்நடை மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது.

Next Story