நாங்குநேரி அருகே முத்துலாபுரம் செபஸ்தியார் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இட்டமொழி,
நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 29–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, புதுநன்மை, திருப்பலி, நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றது.
தேர் பவனிதொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். நள்ளிரவு புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று காலை திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். விழாவில் வானவேடிக்கை, அசனவிருந்து, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கலந்து கொண்டவர்கள்திருவிழாவில் பங்கு தந்தைகள் நார்பர்ட் தாமஸ், ரெமிஜியுஸ் லியோன், விக்டர், சேகரன், விக்டர் சாலமோன், டென்னிஸ் ராஜா, அந்தோணி ராஜ், சகாயராஜ், அல்போன்ஸ் வின்சென்ட், ரூபன், குழந்தை ராஜன், லாரன்ஸ், லடிஸ்லாஸ், பிரகாஷ், ஹெர்மன்ஸ், ராஜா, ஞானராஜ், மரிய அரசு, பென்சிகர், அமலன், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், சகாய ஜஸ்டின், அன்பு செல்வன், கலை செல்வன், சந்தீஸ்ட்டன், பிரைட், ராபின்ஸ்டான்லி, செல்வரத்தினம், ஒய்.டி.ராஜன், பன்னீர் செல்வம், ரெக்ஸ், பீட்டர் பால், ஜாண்சன் ராஜ், சலேட் ஜெரால்டு, ஜஸ்டின், மைக்கிள் ஜெகதீஷ், வசந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாங்குநேரி பங்கு தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள்ஜெபஸ்தியான் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.