ஆண்டிப்பட்டி பகுதியில் போலி கால்நடை டாக்டர்கள்
ஆண்டிப்பட்டி பகுதியில் போலி கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டமனூர்,
ஆண்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 8 இடங்களிலும், கடமலை- மயிலை ஒன்றியத்தில் 7 இடங் களிலும் கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு குறைவான டாக்டர்கள் இருப்பதாலும், ஆய்வாளர்கள் இல்லாமல் உதவியாளர்கள் மட்டுமே இருப்பதாலும் கிராமப் பகுதிக்கு அவர்களால் நேரில் சென்று சிகிச்சை அளிக்க முடிவதில்லை.
கால்நடை வளர்ப்போரும் அலைச்சல் என்று நினைத்து மருத்துவமனைக்கு கால்நடைகளை கொண்டு செல்வதில்லை. இதை சாதகமாக்கி கொண்டு ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட போலி கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை ஆவினில் பயிற்சி பெற்ற ஒரு சில உதவியாளர் களுக்கு சினை ஊசி போட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கள் தங்களை கால்நடை டாக் டர்கள் என சொல்லிக் கொண்டு, மாடுகளுக்கு வரும் மடி நோய், காணை நோய், வைரஸ் காய்ச்சல், சத்து பற்றாக்குறை, கழிச்சல் நோய் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் வைத்தியம் பார்க் கின்றனர். தவறாக சிகிச்சை அளித்து, நோய் முற்றிவிட்டால் பெரிய கால்நடை டாக்டரிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிடுகின்றனர். மாடுகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதைக் கூட போலி கால்நடை டாக்டர்கள் சர்வ சாதாரணமாக செய்கின்றனர்.
போலி கால்நடை டாக்டர் கள் நேரடியாக இருப்பிடத்திற்கு வருவதால் தவறான சிகிச்சைக்கு பணம் கொடுத்து ஏமாறும் நிலை உள்ளது. அதே சமயம் மருந்து கடைகளிலும் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமலேயே, மருந்து மாத்திரைகள் கொடுக்கும் அவல நிலை உள்ளது. சினை ஊசி போடுவதற்கு அரசு ரூ.25 மட்டுமே கொடுத்தால் போதும் என்று கூறிய நிலையில் போலி டாக்டர்கள் ரூ.150 முதல் ரூ.300 வரை வசூலித்து விடுகின்றனர்.
இது குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறுகையில், ஆண்டிப்பட்டி பகுதியில் போலி கால்நடை டாக்டர் கள் நடமாட்டம் உள்ளது. அவர்களை நம்பி விவசாயிகள் ஏமாந்து விடுகிறார்கள். எனவே போலி கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story