தர்மபுரியில் மனுதர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பேர் கைது


தர்மபுரியில் மனுதர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 5:49 PM GMT)

தர்மபுரியில் மனுதர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

திராவிடர் கழகத்தின் சார்பில் மனுதர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு திராவிடர்கழக மாவட்ட தலைவர் மாதன் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், கதிர், சிவாஜி, தமிழ்ச்செல்வி உள்பட திரளானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில் இந்த போராட்டத்திற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழகத்தை சேர்ந்த 32 பேரை கைது செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெண்ணுரிமையை பறித்து, சாதியை பாதுகாக்கும் மனுதர்மத்தை எதிர்ப்போம், விவசாயத்தையும், விவசாயிகளையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் தரக்குறைவாக விமர்சிக்கும் மனுதர்மத்தை எதிர்ப்போம் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story