சமூக வலைத்தளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக கள்ளக்காதலியை மிரட்டிய ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது


சமூக வலைத்தளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக கள்ளக்காதலியை மிரட்டிய ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது
x
தினத்தந்தி 8 Feb 2019 3:15 AM IST (Updated: 8 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ரியல் எஸ்டேட் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பை என்.ஆர்.ஐ. பகுதியில் கணவரை பிரிந்த 34 வயது பெண் ஒருவர் தனது 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு ரியல் எஸ்டேட் ஏஜெண்டு சிராக் கமலசனான் (வயது30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிராக் கமலசனான் அந்த பெண்ணை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். அந்த பெண் அவரிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து அந்த பெண் சிராக் கமலசனானுடனான தொடர்பை துண்டித்தார். இதனால் கோபம் அடைந்த அவர் இருவரும் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் என்.ஆர்.ஐ. போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிராக் கமலசனானை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த ஆபாச படங்களை அவர் தனது மடிக்கணினியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது மடிக்கணினியை பறிமுதல் செய்து பார்த்தனர். அப்போது, அந்த கணினியில் மேலும் 4 பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story