தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம்


தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:45 AM IST (Updated: 8 Feb 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அருணகிரிமங்கலம், ராமலிங்கபுரம், ஜமீன் ஆத்தூர், பிலிமிசை, கூத்தூர் ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அருணகிரிமங்கலம், ராமலிங்கபுரம், ஜமீன் ஆத்தூர், பிலிமிசை, கூத்தூர் ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறையூர் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோவிந்தராசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story