மாதாந்திர பராமரிப்பு பணி, ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ராஜபாளையம், ஆலங்குளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மின்கோட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஆலங்குளம், ரெட்டியப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடக்க உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜபாளையம் நகர் பகுதி, பி.எஸ்.கே.நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐ.என்.டி.யூ.சி.நகர், பாரதிநகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, காலவாசல், கம்மாபட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ராமுதேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கெருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமசந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் தடைபடும்.
இந்த தகவலை ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story