அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களிடம் நெல் வாங்குவதை குறைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
அரசு கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களிடம் நெல் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி,
அரசு கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களிடம் நெல் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நெல்லை மாவட்டம் தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் சவுந்தரராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் வாங்குவதை குறைத்துவிட்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவே இடைத்தரகர்களிடம் நெல் வாங்குவதை குறைக்க வேண்டும்.
முறைப்படுத்த வேண்டும்மேலும் குளங்களில் மண் அள்ளும் போது முறையாக அள்ளாமல் தேவைப்பட்ட இடங்களில் ஆழமாக தோண்டுகிறார்கள். எனவே மண் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர், கடையநல்லூர் வனச்சரகர் செந்தில் குமார், குற்றாலம் வனவர் பாண்டியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, ஈஸ்வரன், தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் ஜாகிர் உசேன், விவசாயிகள் சங்க பிரதிநிதி வேல்மயில் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.