கறம்பக்குடியில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 12 மின்மோட்டார்கள் பறிமுதல்


கறம்பக்குடியில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 12 மின்மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:15 AM IST (Updated: 8 Feb 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 12 மின்மோட்டார்களை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் அக்னி ஆற்று நீரேற்று நிலையத்தில் இருந்து குடி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒருநாள் என சுழற்சி முறையில் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுக்குழாய்களிலிருந்தும், வீடுகளுக்கு தனி இணைப்பு பெற்றவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொது குழாய் களில் குடிநீர் சில வீடுகளுக்கும் சரியாக வருவதில்லை என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாடு குறித்து திடீர் ஆய்வு செய்யுமாறு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுலைமான்சேட் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் குடிநீர் வினியோகிக்கும் நேரத்தில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளவெட்டியில் குடிநீரை உறிஞ்ச வீடுகளில் பயன்படுத்தப்பட்ட 12 மின் மோட்டார்களை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story