பென்னாகரம், பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பென்னாகரம், பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம், பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம்,

பென்னாகரத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சாலை பணியாளர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோன்று பென்னாகரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழக மேலாளர் சந்திரசேகரன், கண்காணிப்பாளர் சித்தார்த்தன், ஓட்டுனர் ஆய்வாளர் கோவிந்தராஜ், நேரம் காப்பாளர் மாது, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, முருகன் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புசெழியன் தலைமை தாங்கி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பேச்சுபோட்டி, ஓவியப்போட்டி, தெருக்கூத்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story