கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 7 இடங்களில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்காகவும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய பொது வினியோக திட்டம் தொடர்பான பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிருஷ்ணகிரி தாலுகா வீரோஜிப்பள்ளியில், ஊத்தங்கரை தாலுகா கனிச்சியில், போச்சம்பள்ளி தாலுகா குடிமேன அள்ளியில், பர்கூர் தாலுகா அஞ்சூரில், சூளகிரி தாலுகா வேம்பள்ளியில், ஓசூர் தாலுகா முதுகானப்பள்ளியில், தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளியில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களின் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story