காட்டுப்பள்ளி கிராமத்தில் எண்ணெய் தொட்டிகள் கட்ட எதிர்ப்பு; ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
காட்டுப்பள்ளி கிராமத்தில் எண்ணெய் தொட்டிகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி தனியார் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி தனியார் துறைமுகம் 12 அடி உயரத்திற்கு மதில் சுவர் கட்டி உள்ளதாலும் ஆழமான பகுதி என்பதாலும் காற்றோட்டம் மற்றும் சுகாதார வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்திற்கு அருகில் நான்கு வழி சாலையும் ரெயில் தண்டவாளமும் அமைக்கப்பட உள்ள நிலையில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தங்கி பள்ளமான பகுதியில் வசிக்கும் வீடுகளில் புகும் நிலை உருவாகும்.
இந்த துறைமுகத்திற்கு அருகில் மிகப்பெரிய 12 தொட்டிகள் கட்டி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயை சேமிக்க பயன்படுத்தப்படவுள்ளதால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
மதில் சுவரை அகற்றவும், நான்கு வழி சாலை, ரெயில் தண்டவாளம் எண்ணெய் தொட்டிகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களுக்கு சுகாதார முறையில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி காட்டுப்பள்ளி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story