மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தஞ்சையில், காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தஞ்சையில், காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் ஏஐ.டி.யூ.சி. அம்மா காய்கறி அங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்க தலைவர் சேவையா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிமாறன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தெரு வியாபாரிகள் சங்க மாநில தலைவர் சந்திரகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், தெரு வியாபாரிகள் சங்க செயலாளர் முத்துக்குமரன், மாநிலக்குழு உறுப்பினர் ராசேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், சாலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தெற்குஅலங்கத்தில் உள்ள அம்மா காய்கறி மார்க்கெட்டில் அராஜகத்தில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டிக்கிறோம். காய்கறி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளான மின்சாரம், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தெரு வியாபாரிகள சட்டப்படி திறந்தவெளிமார்க்கெட் கடை கட்டுமானம் உள்ள கடைகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது வசூல் செய்யப்படும் கூடுதல் வாடகை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தஞ்சை மாநகரில் வணிகக்குழு அமைக்க வேண்டும். விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளை இனம் கண்டறிந்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் பாலமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story