பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2019 10:30 PM GMT (Updated: 8 Feb 2019 9:45 PM GMT)

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்ட சமூகநலத்துறை மூலமாக முதல்–அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2018–19 ஆண்டு இந்த திட்டத்திற்கு அரசு இ–சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த திட்டத்தின் கீழ்பயனடைய விரும்புபவர்களுக்கு, ஆண் வாரிசு இருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன், குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று (தாய் அல்லது தந்தை 35 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்)

2–வது பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால், பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.)

விண்ணப்பத்துடன் 2 பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று (பெற்றோர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்). சாதிச் சான்றிதழ். பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப புகைப்படம் ஆகியவைகளை இணைத்த தரவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Next Story