ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன வனத்துறை அதிகாரிகள் தகவல்


ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன வனத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:15 AM IST (Updated: 9 Feb 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகே உள்ள காரங்காடு, தேர்த்தங்கால், சித்திரங்குடி, மேலச்செல்வனூர், காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பாம்பன் பகுதியில் வனஉயிரின காப்பாளர் அசோக்குமார், சந்திரசேகர், பாலச்சந்தர், ராம்குமார், மண்டபம் வனச்சரகர் சதீஸ் மற்றும் அதிகாரிகள் படகுகள் மூலம் குருசடை தீவு, முயல்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று பறவைகளை கணக்கெடுத்தனர்.

இதேபோல தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் பகுதியிலும் வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன. பிளம்மிங்கோ, கடல் ஆலா, கடல் புறா, மணல் உள்ளான், செங்கால் உள்ளான், பழுப்பு நாரை, செந்நாரை, பூநாரை, சாம்பல் நாரை, ஊசிவால் வாத்து, பனை வாத்து, நண்டு திண்ணி உள்ளான் உள்பட ஏராளமான பறவைகள் வந்துள்ளன. இவற்றை கணக்கெடுப்பதுடன் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.


Next Story